உலக சாதனை படைத்த சென்னை இஸ்லாமிய சிறுவன் அக்ரம்!

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, இத்தாலிக், கொரியா, அரபிக், ஃப்ரெஞ்ச், ஹீப்ரு உட்பட சுமார் 50 மொழிகளில் தட்டச்சு (Typing) செய்யும் சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் அக்ரமின் திறமை குறித்த செய்தியை நியூ இந்தியாவில வெளியிட்டிருந்தோம். எட்டு வயதில் 50 மொழிகளில் டைப்பிங் செய்யும் அக்ரம்!

1.இந்நிலையில் அக்ரமின் அபாரத் திறமையை அறிந்த, யுனிக் உலக சாதனைகள் (Unique World Records) அமைப்பு, தங்களுடைய 2014 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு, அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு அழைப்பு விடுத்தனர்.

 2.இதையடுத்து மகமூத் அக்ரம் கடந்த அகஸ்ட் 24 அன்று பஞ்சாபின் பதிண்டா (Bathinda) என்ற இடத்தில் நடைபெற்ற யுனிக் உலக சாதனைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். 

3.அந்த விழாவில் பாராளுமன்ற தலைமை செயலரும், பதிண்டா தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஸ்ரீ சாருப் சந்த் சிங்லா மற்றும் கேரள மற்றும் லட்சத்தீவின் சாரணர் படையின் கமிஷ்னரும், செம்மனூர் இண்டர்நேசனல் ஜூவல்லர்ஸின் இயக்குநருமான ஹிஷாம் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

4.அந்த விழாவில் யுனிக் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் அமைப்பின் பெயரை 50 மொழிகளில் டைப் செய்து அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு நிகழ்ச்சியாளர்கள் கோரினார். 

5.அக்ரமின் திறமையை எல்லாரும் அறிய பெரிய திரையில் திரையிட்டு காட்டப்பட்டது. அதன்படி கூடியிருந்த அனைத்து மீடியாவின் முன்பும், விழாவிற்கு வந்திருந்த அனைவரின் முன்பாகவும் மகமூத் அக்ரம் டைப்பிங் செய்து எல்லோரையும் ஆச்சரியத்தில் அசத்தினான்.

Advertisement

Close