அதிரையில் களைகட்டும் ரமலான் முதல் நாள் (படங்கள் இணைப்பு)

image

அதிரையில் ரமலான் மாதம் வந்து விட்டாலே மாதம் முழுவதும் பெருநாள் தான். அந்த அளவுக்கு ஊரே களைகட்டும். அந்த வகையில் அஸருக்கு பிறகு பெரும்பாலான அதிரையர்கள் இஃப்தார் உணவுகளுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

இதில் வழக்கம் போல் அதிரையில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும் அதிரை பெரிய கடைத்தெருவில் வழக்கம் போல ரமலானை முன்னிட்டு வாடா, சம்சா பலகார கடைகள், பழக்கடைகள், சர்பத் கடைகள் அணிவகுத்து காணப்பட்டன. இதனை அதிரையர்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். மேலும் அதிரையில் இன்று முழுவதும் வெயிலின் தாக்கம் குறைவாகவும், வானம் மேகமூட்டத்துடனும் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.13331145_1766443993641555_4453094116223917788_n13417560_273216246361761_6849215341774665362_n

image image image image image image image image

Close