Adirai pirai
posts

முத்துபேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி பராமரிப்பு ஊழியர் மரணம் !

 முத்துபேட்டை பேரூராட்சி மின்சார பராமரிப்பு ஊழியராக பணியாற்றுபவர் ராஜா என்கிற புதிய செல்வன் (35).இவர் கடந்த 6ம் தேதி மாலை சின்ன கட்சி மரைக்காயர் தெருவில் மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கை சரி செய்து கொண்டிருந்தர்.மற்றொரு ஊழியர் கோபி உதவியாக செயல்பட்டு வந்தார் .அப்போது ராஜாவை மின்சாரம் தாக்கியது .

உடன் அலறல் சத்தத்துடன் மின் கம்பத்திலேயே கயிற்றில் தொங்கினார் .இதனை கண்ட ஊழியர் கோபி ஒடி சென்று பேரூராட்சியில் மின்சாரத்தை நிறுத்தும் சாதனத்தை எடுத்து வந்து கொத்பா பள்ளி அருகே உள்ள டிரான்ஸ் பாம்மரில் மின்சாரத்தை தடை செய்தார்.சுமார் 45 நிமிடம் மின்கம்பத்தில் தொங்கிய ராஜாவை அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட முயற்சிக்கு பிறகு கீழ கொண்டு வந்தனர் .

உயிரற்ற நிலையில் காணப்பட்ட ராஜாவை ஒரு பைக்கில் மீட்டு முத்துபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இதனை அடுத்து அரசு மருத்துவமனை டாக்டர் .விஜயராஜன் தலைமையில் மருத்துவ குழு நீண்ட நேரம் ராஜாவின் உயிரை கொண்டுவர போராடினர் .ராஜாவின் நிலைமை மோசமானதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் முலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

அப்போது ராஜாவின் நிலை மோசமானதை அறிந்த முத்துபேட்டை டாக்டர் .விஜயராஜன் சேவை மனப்பான்மையுடன் எப்படியும் ராஜாவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் ஆம்புலன்சில் ஏறி கூடவே சென்று தொடர்ந்து மருத்துவம் செய்து கொண்டே சென்றார் .டாக்டரின் மனித நேய செயலால் ராஜாவிற்கு பட்டுகோட்டை செல்லும் பொது உயிர் வந்தது .

பின்னர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது ராஜா சுயநினைவின்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிர் பிழைக்க உதவிய டாக்டர் விஜயராஜனின் மருத்துவ முயற்சியை கண்டு ராஜாவின் உறவினர்களும் ,பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் டாக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர் .

இது குறித்து டாக்டர் விஜயராஜன் கூறுகையில் :

சம்பவம் நடந்த நீண்ட நேரம் ஆகி மருத்துவமனையில் சேர்த்திருந்தாலும் மிகுந்த அக்கறையுடன் சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்த நபர்களை பாராட்ட வேண்டும் .மேலும் பாதிக்கபட்ட ராஜாவிற்கு 45 நிமிடம் மூலை பகுதியில் இரத்த ஓட்டம் இல்லாததால் தற்போது உயிரை மட்டும் நானும் ,மருத்துவ குழுவும் போராடி கொண்டு வந்துள்ளோம் .

தற்போது தஞ்சையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழைப்புக்காவது கடவுள் அவருக்கு சுயநினைவையும் கொடுக்க வேண்டும் என்றார் .இச்சம்பவத்தை நேரில் பார்த்த முத்துபேட்டையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உருக்கத்துடன் காணப்பட்டனர் .

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா இறந்தார் .இவருக்கு லதா என்ற மனைவியும் ,அபி என்ற மகளும் ,சபரிஸ்வரன் என்ற மகனும் உள்ளனர் . 

நன்றி : முத்துபேட்டை நியூஸ் 

               

Advertisement