அதிரை கள்ளுக்கொல்லைக்கு தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைப்பு (படங்கள் இணைப்பு)

அதிரையில் பல பகுதிகள் மின்கம்பிகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டன. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரையின் பல பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இருப்பினும் பல பகுதிகளில் மின் கம்பங்கள் மிகவும் தாழ்வான நிலையில் சென்று கொண்டிருந்தன. இது போல் அதிரை கள்ளுக்கொள்ளை சி.எம்.பி லேன் வழியாக தாழ்வான நிலையில் பல நாட்களாக மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தது. இதனை சமுக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா அவர்கள் தக்க முறையில் அதிரை மின்சார வாரியத்தினரிடம் புகார் அளித்ததன் முடிவாக இன்று மாலை மின் வாரிய ஊழியர்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்தனர். 

எந்த வித லாப நோக்கமும் இன்றி பொதுசேவையில் ஈடுபடும் ஹாலிக் மரைக்கா அவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்கள்.

Close