அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி :மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் சாஹிப் பங்கேற்பு !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தேச மக்களிடையே சகோதரத்துவமும், சமுத்துவமும், ஒற்றுமையும் மேலோங்கும் விதமாக தேசம் முழுவதும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றது. இது போல ஒவ்வொரு மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அனைத்து சமுதாய தலைவர்கள், சமூக தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக தற்போது ஒவ்வொரு மாவட்டமாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நமதூர்  சாரா திருமணம் மஹாலில் வைத்து மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
“நாம் முன்னோக்கிச் செல்வோம்” என்ற தலைப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பற்ற தன்மை உறுதிப்பட கருத்துப்பறிமாற்ற நிகழ்வாகவும், தொடர்ந்து நாம் முன்னோக்கி செல்ல வழிவகை செய்யும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் N.ஷேக் பரிது வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் சாஹிப் அவர்களும், மாநில செயலாளர் J.முஹம்மது ரசீன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இறுதியாக M.அஹமது ரில்லா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Close