குளிர்ச்சியானது அதிரையின் வானிலை! மகிழ்ச்சியானது மக்களின் மனநிலை!

அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த மே மாதம் 100 டிகிருக்கும் அதிகமாக வெயில் வாட்டியாது. மேலும் இந்த ஆண்டு ரமலானும் கொடையை ஒட்டிய ஜூன் மாதத்தின் முற்பகுதியில் வருவதால் முஸ்லிம்கள் பலர் சற்று கவலையடைந்திருந்தனர்.image

இந்நிலையில் சென்ற மாதம் இறுதி வாரத்தில் அதிரையில் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் ரமலான் துவங்கியதில் இருந்தே அதிரையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த 3 நாட்களாக வெயில் அதிரையில் தலைகாட்டவில்லை. இதனால் மக்கள் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். நோன்பாளிகளுக்கு இலகுவாக அதிரையில் குளிர்ச்சியான கூழலைபேற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Close