பள்ளி பாடபுத்தகங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம்

 1 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2016-17 கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016-17 கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர, பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 “இ”- சேவை மையங்களிலும் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேற்படி பாடநூல்கள் 48மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் வந்து சேரும். இ-சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

Close