லண்டனில் தமிழர்கள் பள்ளியில் அதிரை நோன்பு கஞ்சியுடன் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் தமிழர்களால் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவீட்டில் மஸ்ஜித் அல்-ஹிதாயா என்னும் பள்ளிவாசல் குரைடனில் துவங்கப்பட்டது. இதன் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்பொழுது ரமலான் மாதம் தராவீஹ் தொழுகை இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் அங்கு நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை நோன்பு கஞ்சி பரிமாறப்பட்டது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.  image image

Close