Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை TIYA வின் 10 ஆண்டுகால சேவைகளின் தொகுப்பு!

tiya blueஅன்பிற்கினிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுநல்லதே அதே(பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்குவழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள்தீமைகளுக்கு (இதைப் ) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள்செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல் பகரா 2:271)

வல்ல நாயன் அல்லாஹ்வின் நாட்டத்தால், தஞ்சை மாவட்டம்.அதிராம்பட்டிணத்தின் அமீரக வாழ் மேலத்தெரு மஹல்லாவாசிகளால் கடந்த29.12.2005 அன்று தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA )என்ற அமைப்புபாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வு நம் சமூகத்தில் அமைப்பதற்காக அமீரகத்தில்துவங்கப்பட்டது.இதனுடைய கிளையாக தாயகத்திலும் செயல்பட்டுக் கொண்டுவருகிறது நமது முஹல்லாவில் கல்வி சுகாதாரம். பாதுகாப்பு போன்றபல்துறைகளில் முன்னேற்ற வாழ்வு ஏற்படுத்தி பாடுபடுவதே இவ்வமைப்பின்அடிப்படை நோக்கமாகும்.

எனவே கடந்த 29.12.2005 முதல் அமீரக TIYA பொறுப்பில் இருந்தவர்களின்கடுமையான உழைப்பிலும். மஹல்லாச் சகோதரர்களின் நல்லாதரவின்காரணமாக இவ்வமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்! அதற்கான சான்றுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அவை வருமாறு:

  • கல்விச் சாலைகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டும்கருத்தரங்கம் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப் C.N.M. சலீம்அவர்களை கொண்டு நடத்தியது.
  • மஹல்லாவில் உள்ள இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமதுமஹல்லாவில் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்வு மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
  • புதுக்குளத்தில் கழிவு நீர் கலந்து கொசுக்களினால் ஏற்படும் சுகாதாரகேடுகளை தடுக்க அக்குளம் 2011-ல் சுத்தம் செய்யப்பட்டது.
  • குளிர்காலங்களில் கழிவு நீர் வடிகால்களில் உருவாகும் கொசுக்களினால்ஏற்படும் கேடுகளை தடுக்க (plumping machine) கொசு மருந்து தெளிப்பான்துணைக் கொண்டு அனைத்து கழிவு நீர் வடிகாலிலும் கொசு மருந்துதெளிக்கப்பட்டது.
  • மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நமது மஹல்லாவில்இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
  • இந்தியன் ரெட்கிராசுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் புற்று நோய்விழிப்புணர்வு முகாம் நமது மஹல்லாவில் நடத்தப்பட்டது.
  • நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்துஅவர்களுக்கு மருத்துவ உதவிகள் பல செய்யப்பட்டது.
  • நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் உள்ள குமர் திருமணத்திற்கு TIYAசார்பாக இல்லாமல் TIYA அங்கீகாரத்துடன் தனிநபர்கள் மூலம் இது வரை பலஉதவிகள் செய்யப்பட்டது.
  • நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் இருந்த பெண்களை கண்டறிந்துஅவர்களின் வாழ்வாதார உதவியாக தையல் மிஷின், கிரைண்டர் மற்றும்இட்லி சட்டிகள் வழங்கப்பட்டது.
  • தாயகத்தில் நமது மஹல்லாவில் சம்பவிக்கும் மரணங்கள் குறித்த செய்திகளைSMS,whatsApp,facebook மூலம் அமீரத்தில் வாழ் TIYA உறுப்பினர்களுக்கு மற்றும் அமீரகம்அல்லாத பிற நாடுகளில் வாழும் நமது மஹல்லாவாசிகள் உடனுக்குடன் அறியசெய்து வருகிறோம் www.adiraitiyawest.org என்கிற நமது  இணையத்தளத்திலும் பதிவு செய்துவருகிறது.
  • நமதூரில் எத்தனையோ அமைப்புகள், இயக்கங்கள் ரமளான் மாதங்களில்பித்ரு ஸக்காதை வசூல் செய்து வினியோகித்து வந்தாலும், அந்தந்தமஹல்லா நிர்வாகத்தால் விநியோகம் செய்வதனால் மட்டுமே அதுமுழுமையானதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, கடந்த 2009 ம்ஆண்டு முதல் உண்மையிலேயே தேவையுடைய மக்களை கண்டறிந்து அவர்களையும் பெருநாள் அன்று இன்புறச் செய்ய வேண்டும் என்பதற்காகசிறப்பான முறையில் TIYA உறுப்பினர்களின் பித்ரு ஸகாதை வசூல் செய்துதாயகத்தில் வினியோகித்து வருகிறோம்.
  • 2009-ம் ஆண்டு மொத்தம், தொகை 40.000/-பயனடைந்த குடும்பங்கள் 90
  • 2010-ம் ஆண்டு மொத்தம், தொகை 40.000/-பயனடைந்த குடும்பங்கள் 90
  • 2011-ம் ஆண்டு மொத்தம், தொதை 40.500/-பயனடைந்த குடும்பங்கள் 100
  • 2012-ம் ஆண்டு மொத்தம், தொகை 65.000/- பயனடைந்த குடும்பங்கள் 110
  • 2013-ம் ஆண்டு மொத்தம், தொகை 95.000/- பயனடைந்த குடும்பங்கள் 120
  • 2014-ம்ஆண்டு மொத்தம்,தொகை60.000 பயனடைந்த குடும்பங்கள் 100
  • 2015-ம்ஆண்டு மொத்தம்,தொகை 55.000 பயனடைந்த குடும்பங்கள் 90
  • பூமி வெப்பமாவதை மரம் வளர்ப்பின் மூலம் தான் தடுக்க முடியும் என்பதின்காரணமாக நமது மஹல்லாவில் உள்ள சாலையோரங்களில் 30-க்கும்மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
  • நமது மஹல்லாவில் உள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் குப்பைகளினால்ஏற்படும் சுகாதார கேடுகளை, தவிர்க்கும் வகையில் நமது மஹல்லாவில்குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை கூடைகள் வைக்க முடிவு செய்து முதல்கட்டமாக 2011 ல் 5 இடங்களில் வைக்கப்பட்டது.
  • செழியன் குளம் பெண்கள் பகுதியில் மறைவிடமின்றி திறந்த நிலையில்பெண்கள் குளித்து வருவதாக நமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது,அதற்கு நமது TIYA சார்பாக தென்னங்கீற்றிலான தடுப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
  • நமது மஹல்லாவில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் செய்வதில் ஆர்வம்கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு. நமது தாஜுல் இஸ்லாம்சங்கத்தில் TIYA சார்பாக கடந்த 2010 ம் ஆண்டு 5 தையல் இயந்திரங்களை கொண்டு தையல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இதுவரை 120பெண்களுக்கு மேல் பயனடைந்து இருக்கிறார்கள்.
  • அவ்வப்போது காலத்தின் அவசியம் கருதி நமது மஹல்லாவில் உள்ள 16 மற்றும்17வது வார்டு கவுன்சிலர்களுக்கு நமது மஹல்லாவிற்கு தேவையான சாலைவசதி, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, வீட்டுக் கழிவுகள் அப்புறப்படுத்துதல்ஆகியவைகள் குறித்து நமது TIYA சார்பாக கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.
  • நமது மஹல்லாவில் உள்ள ரேஷன் கடையில் வெளியே ரேஷன் பொருட்களைவாங்க வரும் பொது மக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும்சிரமப்பட்டு ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர், ஒரு மேற்கூரைஅமைத்துக் கொடுத்தால் அவர்களுடைய சிரமங்களை போக்கிவிடலாம்என்று நமது மஹல்லாவாசிகள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையைஏற்று நமது TIYA சார்பாக நவீனமான முறையில் ஒரு மேற்கூரை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
  • நமது மஹல்லாவில் உள்ள பெண்கள் குளம் அருகில் உள்ள பகுதிகள்ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பெண்கள் மற்றும்சிறுவர்களுக்கான பூங்கா ஓன்று ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மஹல்லாவாசிகளின் பங்களிப்பில் ஒரு பூங்கா ஏற்படுத்தப்பட்டதற்கு நமதுTIYA சார்பாக உதவியும் அளிக்கப்பட்டது.
  • கடந்த 15.12.2010-ல் நமது மஹல்லாவில் உள்ள அல் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்பள்ளி நிர்வாகத்தினரால் அப்பள்ளி புனரமைப்பு குறித்து கோரிக்கை கடிதம்அனுப்பி இருந்தார்கள். அதனை ஏற்று நமது மஹல்லாவாசிகளின் உதவியால்10,4000 செலவில் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி முழுவதும்புனரமைக்கப்பட்டுள்ளது.
  • நமது மஹல்லாவில் உள்ள அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி இமாம் மற்றும்முஅத்தின் சம்பளம் வகைக்காக அமீரக வாழ் நமது TIYA உறுப்பினர்களின்பங்களிப்பு மற்றும் நிதியிலிருந்து 2வருட காலங்களுக்கு மட்டும் நமது தாஜுல்இஸ்லாம் சங்கத்திற்கு TIYA நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படிகடந்த ஜூலை 2012 முதல் ஜுலை 2014 வரை வழங்கப்பட்டது..
  • அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் ஒலி பெருக்கி (மைக்செட்) பழுதானநிலையில் இருப்பதை அறிந்து TIYA நிர்வாகிகள், நமது TIYA வின் தற்போதைய துணைத்தலைவர் D.சகாபுதீன் & சாகுல் ஹமீது அவர்களிடம் நிதி பெற்று சீர்செய்து தரப்பட்டுள்ளது.
  • நமது மேலத்தெரு மஹல்லா ஜும்மா பள்ளியில் மின் தடை ஏற்படும் போதுஜும்ஆ தொழுகைக்கு வருகிறவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்என்பதை கருத்தில் கொண்டு, ஒரு ஜெனரேட்டர் ஜும் ஆ பள்ளியில் அமைக்கவேண்டுமென நமது தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கோரிக்கைவைத்தனர். அதற்கு உதவும் வகையில், அமீரக TIYA முன்னாள் செயலாளர்S.M. சிராஜுத்தீன் முயற்சியில் நமது TIYA சார்பாக ரூ 1.00,000/- ஜும்ஆ பள்ளிநிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
  • நமது மஹல்லாவாசிகள் அவ்வப்போது கொண்டு வரும் கோரிக்கைகள்குறிப்பாக ஏழை குமருக்கான உதவி, ஏழை மாணவர்களுக்கான உதவிகளைதனி நபர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, நமது TIYA -வின்ஒத்துழைப்புடன் பல உதவிகள்  செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4வருட காலங்களாக ஏழை மாணவ-மாணவிகளுக்கு நோட் புக் வழங்கப்பட்டுவருகிறது.
  • கடந்த 2013-ம் ஆண்டும் நமது மஹல்லாவில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ளமாணவ- மாணவிகளுக்கு கண்டறிந்து சுமார் 15 மாணவ-மாணவிகளுகு நோட்புக்கும் சுமார் 15 மாணவி-மாணவிகளுக்கு ஒரு வருட காலத்திற்கு ஸ்கூல் பீஸ்கட்டி தரப்பட்டுள்ளது.
  • நமது மஹல்லாவில் உள்ள ஒரு ஏழையின் வீடு பழுதான நிலையில் உள்ளது.அவர்களுக்கு உதவுவதற்கு எவ்வித வழிகளும் இல்லை அதனால் அவர்களின்பழுதடைந்த வீட்டை சரி செய்துதர கோரிக்கை வைக்கப்பட்டது.அக்கோரிக்கை ஏற்கப்பட்டு நமது TIYA உறுபினர் சகோ. சாகுல் ஹமீது (சிகப்பு தொப்பி) அவர்களை பொறுப்பாளராக நியமித்து, நமது TIYAஉறுப்பினர்களின் உதவியால் ஒரு நிரந்தரமான இருப்பிடத்தை அந்த ஏழைகுடும்பத்திற்கு நமது மஹல்லா நிர்வாகிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • நமதூரில் உள்ள அனைத்து மஹல்லாவாசிகளும் ஒன்றிணைந்துசெயல்படுவதற்கு ஒரு அமைப்பு அவசியம் என கருதியோர்கள்ஒன்றிணைந்து ‘அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு (AAMF )உருவாக்கத்தில், நமது TIYA  நிர்வாகிகளின் பங்களிப்பு மகத்தானது என்றால்அது மிகையில்லை. AAMF சார்பாக 30.09.2011 அன்று நடைபெற்றபொதுக்குழுவிற்கு TIYA-வின் சார்பாக நமது பங்கும் அளிக்கப்பட்டது.
  • மேலே உள்ள காரியங்களிலும் முக்கியமாக நமது மஹல்லா தலைவராகஇருந்த மர்ஹும் அல்ஹாஜ் M.M.S. அப்துல் வஹாப் (சாச்சா) அவர்கள்வபாத்தனாவுடன், நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு புது நிர்வாகம்அமைப்பதில் தாமதம் ஏற்ப்பட்டு  வந்ததை கருத்தில் கொண்டு, நமது TIYAநிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நமது மஹல்லா நிர்வாகம் அமைப்பதற்குபெரும் பங்களிப்பை செய்துள்ளது.
  • கடந்த 2013 ஹஜ்ஜீப் பெருநாளின் போது நமது முஹல்லாவாசிகளால்அறுக்கப்பட்ட குர்பானி ஆடுகளின் தோல்கள் 67 வசூலிக்கப்பட்டு. தோல்கள்அனைத்தையும் விற்பனையின் மூலம் மொத்தம் ரூபாய் 22,110 கிடைத்தது.இதை தாயக TIYA நிர்வாகிகளின் முடிவின்படி நமது மஹல்லாவில் உள்ளதேவையுடைய ஏழைகளை கண்டறிந்து, அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூபாய் 500 வழங்குவது எனத் தீர்மானித்து அதன்படி நமதுமஹல்லாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வில் முதல்கட்டமாக 14 நபர்களுக்கு மாதாந்திர உதவி வழங்குவது  என தீர்மானித்துகடந்த 05.01.2014 அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தோலின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது.
  • கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆதார் தேசிய அடையாள அட்டைக்குவிண்ணப்பித்து புகைப்படம் எடுக்காதவர்களுக்கு நமதூர் பேரூந்து நிலையம்அருகில் உள்ள ஒன்றாம் நம்பர் அரசினர் பள்ளிக்கூடத்தில் புகைப்படம்எடுக்கும் பணி நடைபெற்ற போது. நமது மஹல்லாவாசிகள் ஒன்றாம் நம்பர்பள்ளிக்கூடத்திற்கு நமது மஹல்லாவாசிகளுக்கு சென்று வர மிக சிரமம்ஏற்படுமென்பதை கருத்தில் கொண்டு நமது TIYA நிர்வாகிகளின் முயற்சியால்இது சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அதாவது பட்டுக்கோடைவட்டாசியரிடம் (தாசில்தார்) தாசில்தாரிடம் முறையிட்டு அது போன்று நமதுமஹல்லாவில் உள்ள அரசினர்  உயர் நிலைப் பள்ளியில் நமதுமஹல்லாவாசிகளுக்கு புகைப்படம் எடுக்க முகாம் நடத்த கோரிக்கைவைத்து அதனை தாசில்தார் அவர்கள் ஏற்று 3 தினங்கள் நமது தெரு அரசினர்பள்ளியில் மறு புகைப்படம் எடுக்கும் முகாம் மிக சிறப்பாக நடத்திமுடிக்கப்பட்டது.
  • வல்ல நாயன் அல்லாஹ்வின் மிக பெரும் கிருபையால் நமது மஹல்லாவில்உள்ள பெண்கள் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகளை நமது தாஜுல் இஸ்லாம் சங்கநிர்வாகிகளுடன் நமது தாயக TIYA கிளை நிர்வாகிகளும் இணைந்துசம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து மிகசிரமங்களுக்கு மத்தியில் பெண்கள் குளத்திற்க்கு தண்ணீர் கொண்டு வந்துசேர்க்கப்பட்டது.
  • நமது மஹல்லவில் உள்ள பாதாள சாக்கடையில் தேங்கி கிடக்கும் குப்பைகூளங்களினால் கொசுகள் உற்பத்தியாகி அதனால் பல சுகாதார கேடுகள்ஏற்ப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நமது TIYA வின் சார்பாக 16வதுவார்டுக்கு 5000 ரூபாய்க்கு ஒரு அரபான் வண்டி வாங்கிகொடுக்கப்பட்டுயுள்ளது
  • அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளி வாசலில் பெண்கள் பயான், மற்றும் நோன்பு காலங்களில் பெண்களின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளியின் மாடியில் மேற்கூரை அமைத்து கொடுக்கப்பட்டது.
  • மேலத்தெரு இளைஞர்களின் கோரிக்கையான உடற் பயிற்சி மையம் மற்றும் நூலகத்தை கட்டிடமாக கட்டி மராமத்து செய்து தரவேண்டுமென்ற கோரிக்கையை TIYA ஏற்று அதற்கான பணிகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஊரில் கேன்சர் விழிப்புணர்வு முகாம் துண்டு பிரசுரங்கள், வழங்குவது மருத்துவ உதவிகள், கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது மற்றும் தெருவின் நலன்களின் அக்கரையோடு  தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான சேவைகளை புதிய நிர்வாகம் தொடர்ந்து செய்யுமென தெரிவித்து கொள்கிறோம்.

என்றும் அன்புடன்

TIYA நிர்வாகம்