Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களே நாம் என்று திருந்த போகிறோம்!


அதிரையில் உள்ள சுகாதார நிலை குறித்து நன் அனைவருக்கும் தெரியும். இது குறித்து பல்வேறு பதிவுகளை நமது அதிரை பிறை பதிவிட்டுள்ளோம். இதில் பொதுமக்கள் அதிரையின் சுகாதார சீர்கேடு குறித்த புகார்களுக்கு முன் வைக்கும் காரணம் பேரூராட்சி சரியில்லை. வார்டு கவுன்சிலர்கள் சரியில்லை என்பதாகும். இதில் ஒரு பக்கம் உண்மை இருந்தாலும் பிறரை குறை சொல்லும் நாம் எந்த அளவுக்கு சரியாக நடந்துள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒரு நல்ல திட்டத்தை அறிமுகம் செய்தால் நாம் அதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். சுகாதாரம் குறித்து குறை சொல்லும் நாம் நமது சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துள்ளோமா? என்றால் இல்லை. வீட்டில் உள்ள குப்பைகளை பாலிதீன் பையில் கட்டி வீட்டில் இருந்தே ரோட்டுக்கு எறிகிறோம். அது யார் மீது விழுந்தாலும் நமக்கு கவலையில்லை. வீட்டுக்கு குப்பை அள்ள வருபவர்களிடம் சரியாக குப்பையை கொடுக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இது போன்று அதிரை தக்வா பள்ளி அருகில் பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவதும் அதனை பேரூராட்சி துப்பறவு ஊழியர்கள் நாள் கணக்கில் அல்லாமல் இருப்பதும் நீடித்து வந்தது. இதனால் தொழுகையாளிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னதாக அதிரை SDPI சார்பாக அங்கு ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இதில் மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் சிதறி சாலைகளுக்கு வராமலும், ஆடு மாடுகள் பாலிதீன் பைகளை உட்கொள்ளாமலும் உள்ளன. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த குப்பை தொட்டி வைக்கப்பட்ட பிறகும் கூட சிலர் வந்த வேகத்தில் குப்பை தொட்டியில் போடாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

நாம் படத்தில் காண்பது ஒரு உணவு பொட்டலத்தை அப்படியே குப்பை தொட்டியில் அருகாமையில் கிடப்பது. இன்று காலை எடுக்கப்பட்ட படம் அது. இதனை அந்த ஒரு பையில் கட்டி அந்த தொட்டியில் போடுவதற்கு ஒரு நிமிடன் தேவைபடுமா???

நாம் இப்படி நம்முடைய கடமையை செய்யாமல் இருக்கும் சூழலில் பிறரை குறை சொல்லி என்ன பயன்!!! சிந்திப்போம்!!!
நாம் திருந்துவோம்!!! நாடு திருந்தும்!!!