அதிரையில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி! எட்டாக்கணியாகி விட்டதா?

மக்கள் தினமும் சமையலுக்காக பயன்படுத்தி வரும் காய்கறிகளின் விலை சில ஆண்டுகளாக ஏறு முகமாகவே இருந்து வருகிறது. இது தவிர ஒவ்வொரு 3 மாதத்திற்கும் குறிப்பிட்ட ஒரு காய்கறியின் விலை உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஆண்டு வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிரையில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமையலுக்காக அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி விலை இமாலய உயர்வை சந்துள்ளதால் சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிரை பெரிய மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் காய்கறி வியாபாரி ஒருவர் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். 

Close