அதிரை நைட் ரைடர்களை விரட்டி வந்த போலிஸார்! நள்ளிரவில் நடைபெற்ற அதிரடி சேசிங் சம்பவம்!

நமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பெருநாள் தான். சஹர் செய்வது, தூங்குவது லுஹருக்கு எழுவது அமல்கள் செய்வது அஸருக்கு பிறகு நோன்பு கஞ்சி வாங்குவது இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கு வாங்கிக் கொடுப்பது, நோன்பு திறந்து விட்டு இஷா வரை வீட்டிலோ நண்பர்களுடனோ ஓய்வெடுப்பது, தராவீஹ் தொழுவது என்று மாதம் முழுவதும் நாட்கள் சுமுகமாக நகரும்.
பெரியவர்களை விட இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தான் ரமலான் என்றால் உற்ச்சாகம்.

ஆனால் சில இளைஞர்கள் தராவீஹ் தொழுதுவிட்டு வீடுகளுக்கு செல்லாமல் நைட் ரவுண்ட்ஸ் என்ற பெயரில் இரவு முழுவதும் ஊரெல்லாம் சுற்றி வருகின்றனர்.

இதனால் சிறிதளவும் உபயோகம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் இம்மாதம் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் அதிகம் உடைவதாகவும் வீட்டு கதவுகளை இரவு நேரங்களில் சிலர் கல்லை எரிந்து விட்டு ஓடுவதாகவும் சென்ற வருடங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சில இளைஞர்கள் மோட்டார் பைக்குகளில் இரவு நேரங்களில் பட்டுக்கோட்டைக்கு விளையாட்டுக்காக அதிவேகத்தில் சென்று தேனீர் அருந்திவிட்டு வருகின்றனர்.

சென்ற வருடம் இதனால் ஒரு சில சாலை விபத்துகள் ஏற்ப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்று நைட் ரவுன்ஸ் சென்ற சில இளைஞர்களை காகாவல்துறை யினர் கண்டித்து அனுப்பியதும் நடந்துள்ளது.

இது போன்று பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையூறு கொடுக்கும் நைட் ரவுன்ஸ் நமக்கு தேவை தானா.

நேற்றைய தினம் அதிரை இளைஞர்கள் சிலர் பைக்குகளில் பட்டுகோட்டைக்கு சென்று ரேசில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஏஎஸ்பி அரவிந்த் மேனன் அவர்கள் நிற்க சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதை அடுத்து அவர்களை விரட்டி வந்ததில் அந்த இளைஞர்கள் அதிரைக்குள் நுழைந்து மறைந்து விட்டனர். இதனை அடுத்து ஊருக்குள் வந்த ASP தலைமையிலான போலிஸார் அதிரையில் வாகங்களில் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் சோதனை ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்று சில இளைஞர்கள் செய்யும் தவறுக்காக அப்பாவி மக்கள் பலர் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ரமலான் மாதம் என்பது வருடத்திற்க்கு ஒரு முறை அல்லாஹ் நமக்கு அளிக்கும் அருட்கொடை ஆகும். பிற மாதங்களில் அல்லாஹ் நாம் செய்யும் ஒவ்வொரு நல் அமல்களுக்கும் 10 மடங்கு நண்மையை தருகிறான். ஆனால் ரமலான் மாதத்தில் மட்டும் தான் அல்லாஹ் நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 70 மடங்கு நண்மைகளை தருகிறான். இப்படிப்பட்ட மேன்மையான மாதத்தில் வீனாக நைட் ரவுண்ட்ஸ் என்னும் பெயரில் இரவு நேரங்களில் ஊர் சுற்றுவது. கேரம் போர்ட் போன்ற விளையாட்டுகளில் காலத்தை கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்.

இவை அனைத்தையும் இம்மாதத்தில் தவிர்த்து நம்மிடம் வருகை தந்திருக்கும் இந்த அழகிய விருந்தாளியை மகிழ்ச்சியுடன் வழியனுப்ப அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.

Close