அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலை மறியல்

அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலை மறியல்.

திருத்துறைபூண்டியில் இன்று காலை தமுமுகவின் சார்பில் திடீர் சாலை மறியல் நடத்தப்பட்டது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மனி ஒருவர் திருத்துறைபூண்டியில் வீதியில் இறந்து கிடந்துள்ளார் உடனே காவல்துறை பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவ மனையில் வைத்துள்ள தகவல் தெறிந்து இறந்துவிட்டவரின் உறவினர்கள் தமுமுகவினர்களை அழைத்துக்கொண்டு பிரேதத்தை அடையாளம்கண்டு உறுதி செய்தபின் காவல்நிலையம் சென்று சில எழுத்துப்பூர்வமான வேலைகளை முடிப்பதற்குள் இரவு நேரமாகி விட்டபடியால் திருத்துறைபூண்டி காவல்துறை கேட்டுக்கொண்டதற்கினங்க இன்று காலை பிரேதபரிசோதனை செய்து பிரேதத்தை பெறுவதற்காக இறந்துவிட்டவரின் உறவினர்கள் திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட நேரமாக காத்திருந்தும் ஏதேதோ காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து பிரேதபரிசோதனை செய்யாமல் காலம் கடத்தி அலட்சியப்படுத்தியுள்ளனர் இதையறிந்த தமுமுகவினர் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுத்தீன் அவர்கள் தலைமையில் ம ம க திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் மமக முன்னால் மாவட்ட துணை செயலாளர் கட்டிமேடு ராவுத்தரப்பா ஜியாவுதீன் நாச்சிகுளம் ரசீது திருத்துறைபூண்டி நகர தமுமுக நிர்வாகிகள் கூத்தாநல்லூர் நகர தமுமுக நிர்வாகிகள் மற்றும்பலருடன் நாகை சாலையில் அமர்ந்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலை மறியல் செய்யப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதினால் சாலை மறியல் கைவிடப்பட்டு உடனடியாக பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-நாச்சி குளம்.தாஜுத்தீன்

Advertisement

Close