Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை நடுத்தெருவில் குவியல் குவியலாக கிடந்த மனலை அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள் (படங்கள் இணைப்பு)

image அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஹாலிக் மரைக்கா. சமுக ஆர்வலரான இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஊரில் உள்ள புகார்களை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு மனுவின் மூலமாக எடுத்துறைத்து வருகிறார். இவர் வழங்கிய புகார்களை அடுத்து பல முறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதிரை நடுத்தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலையில் மணல் கொட்டியாவாறு குவியல் குவியலாக கிடந்தன. கட்டுமானப்பணிக்காக வரும் மணல்கள் சாலைகளில் பரவி விடுவதால் இது போன்று மணல் குவிகின்றன. இதனை கடந்த பல ஆண்டுகளாக ஹாலிக் அவர்கள் பேரூராட்சிக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை அதிரை பேரூராட்சி சார்பாக இந்த மணல் அகற்றப்பட்டது.image