பாகிஸ்தானில் 80 வயது இந்து மத முதியவரை தாக்கிய போலிஸ் கைது!

imageபாகிஸ்தான் கராச்சியில் ரமலானை ஒட்டி பழங்கள் மற்றும் பொருட்களை கோகுல்தாஸ் என்பவர் விற்று வந்தார். இஃப்தாருக்கு முன் அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி அலி உஷேன் என்ற போலீஸ்காரர் அவரை கண்மூடிதனமாக அடித்து உதைத்துள்ளார்.

இந்தசம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர் சமுக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார். இதனை அடுத்து முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பலர் காரசாரமாக விவாதித்தனர்.

மேலும் கோகுல்தாஸின் பேரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்துபோலிஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி அலி உஷேனை போலிஸார் கைது செய்துள்ளனர்.image

Close