இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிய தடை!

image

செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அருகில் உள்ளது பல்கேரிய நாடு. துருக்கிக்கு முன்பாக ஐரோப்பிய கண்டத்தின் கடைசி நாடாக பல்கேரியா உள்ளது.

இங்கு ஆடைகளால் முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு பல்கேரியா பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அந்நாட்டின் தேசியவாத முன்னணி கட்சி கொண்டு வந்த மசோதாவிற்கு 108 எம்.பி-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். 8 எம்.பி-க்கள் மட்டும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த மசோதா மூலம் பெண்கள் நகாப், புர்கா ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்படும். மசோதா அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், நிர்வாக அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
மசோதாவானது சில பாராளுமன்ற குழுக்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முகத்தை மறைப்பதற்கு எதிரான சட்டம் ஏற்கனவே பல்கேரியாவின் பஸர்த்ஷிக், ஸ்டாரா ஸகோரா, சில்வேன் மற்றும் பர்காஸ் ஆகிய நகராட்சிகளில் நடைமுறையில் உள்ளது.

முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் இந்த சட்டம் பெல்ஜியம் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

Close