இரக்கமனம் படைத்தவர்களே! பட்டுக்கோட்டை பாலகன் ஆசிஃப் க்கு உதவுங்கள்!

pattukottaiபட்டுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் முஹம்மது ஆஷிப் (வயது 10). மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் எதிர்பாராதவிதமாக அதிக மின் அழுத்தம் உள்ள மின் கம்பியை தொட்டு விட்டார். இதன் காரணமாக அவரது வலது கை செயல் இழந்தது. மருத்துவர்கள் இச்சிறுவனின் கையை முற்றிலுமாக அகற்றினர்.

தற்பொழுது இச்சிறுவன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அரை எண் 312 ல் உள்ளார். இவருடைய தந்தை ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். மிகவும் சொற்பமான அளவு சம்பளம் வாங்குகிறார். தற்பொழுது இவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றார்கள். ஆனால் இது அச்சிறுவனின் மருத்துவ உதவிக்கு போதுமானதாக இல்லை.

மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு இம்மாதத்திற்குள் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தாக வேண்டும் கூறியுள்ளனர். எனவே இரக்கமனம் படைத்தவர்கள் இச்சிறுவனின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

உதவி செய்வதற்காக இணையதளத்தில் ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள  அதில் நீங்கள் உதவலாம்.

 

Close