Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையில் நள்ளிரவில் தொடரும் வாகன சோதனை! நைட் ரைடர்ஸ்களுக்கு எச்சரிக்கை!

நமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பெருநாள் தான். சஹர் செய்வது, தூங்குவது லுஹருக்கு எழுவது அமல்கள் செய்வது அஸருக்கு பிறகு நோன்பு கஞ்சி வாங்குவது இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கு வாங்கிக் கொடுப்பது, நோன்பு திறந்து விட்டு இஷா வரை வீட்டிலோ நண்பர்களுடனோ ஓய்வெடுப்பது, தராவீஹ் தொழுவது என்று மாதம் முழுவதும் நாட்கள் சுமுகமாக நகரும்.
பெரியவர்களை விட இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தான் ரமலான் என்றால் உற்ச்சாகம்.

ஆனால் சில இளைஞர்கள் தராவீஹ் தொழுதுவிட்டு வீடுகளுக்கு செல்லாமல் நைட் ரவுண்ட்ஸ் என்ற பெயரில் இரவு முழுவதும் ஊரெல்லாம் சுற்றி வருகின்றனர்.

சில இளைஞர்கள் மோட்டார் பைக்குகளில் இரவு நேரங்களில் பட்டுக்கோட்டைக்கு விளையாட்டுக்காக அதிவேகத்தில் சென்று தேனீர் அருந்திவிட்டு வருகின்றனர்.

சென்ற வருடம் இதனால் ஒரு சில சாலை விபத்துகள் ஏற்ப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்று நைட் ரவுன்ஸ் சென்ற சில இளைஞர்களை காகாவல்துறை யினர் கண்டித்து அனுப்பியதும் நடந்துள்ளது.

இது போன்று பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையூறு கொடுக்கும் நைட் ரவுன்ஸ் நமக்கு தேவை தானா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை இளைஞர்கள் சிலர் பைக்குகளில் பட்டுகோட்டைக்கு சென்று ரேசில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஏஎஸ்பி அரவிந்த் மேனன் அவர்கள் நிற்க சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதை அடுத்து அவர்களை விரட்டி வந்ததில் அந்த இளைஞர்கள் அதிரைக்குள் நுழைந்து மறைந்து விட்டனர். இதனை அடுத்து ஊருக்குள் வந்த ASP தலைமையிலான போலிஸார் அதிரையில் வாகங்களில் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் சோதனை ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்று சில இளைஞர்கள் செய்யும் தவறுக்காக அப்பாவி மக்கள் பலர் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

இதனை தொடர்ந்து அதிரை வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம், கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர்கள் தங்கள் வாகன உரிமங்களை கையில் வைத்திருந்தால் போலிஸாரிடம் இருந்து தப்பலாம்.