பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்கா முள்ளுகுறிச்சியில் பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி சாதிக் பாஷா தமுமுக மாநில செயலாளர் தலைமையில் நடைபெற இருந்த நிலையில் மாவட்ட டாஸ்மார்க் மேலதிகாரி மனோகரன் அவர்கள் அழைத்ததின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஷேக் காஜா மைதீன் தமுமுக செயலாளர் சுல்தான் பாஷா மமக செயலாளர் பக்ருதீன் பொருலாளர் பாஷா இராசிபுரம் நகர தலைவர் ராஜா முகமது ஆகியோர் டாஸ்மாக் மேலதிகாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் இறுதியில் 20 நாட்கள் அவகாசம் கேட்டதற்கினங்க 20 நாட்கள் அவகாசம் தரப்பட்டது கடையை அகற்றவில்லையென்றால் 20 நாட்களுக்கு பிறகு நமது போராட்டங்கள் தொடரும்.என த.மு.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
-பகுருத்தீன்.த.மு.மு.க.

Advertisement

Close