கொள்ளுமாங்குடி புதிய ஜும்மா பள்ளி திறப்பு விழாவில் அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

திருவாரூர் மாவட்டம் கொள்ளுமாங்குடியில் இன்று புதிய ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளியை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.
இதனை தொடர்ந்து சொற்பொழிவும் குத்பாவும் ஓதப்பட்டு ஜும்மா தொழுகை நடத்தப்பட்டது. இதில்  அதிரையர்கள் உட்பட 7000 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக துஆ மஜ்லிஸிற்கு பிறகு ஜும்மாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

அதிரை பிறைக்காக படங்களுடன்: லயன் S.M.A.SALAM

Advertisement

Close