அதிரையில் மாலை மஹ்ரிபில் மண் மனக்க, மக்கள் மனதை மகிழ்வித்த மழை (படங்கள் இணைப்பு)

13423790_1050133571723687_7593007134575827167_n இன்றுடன் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் 12வது நோன்பை நிறைவு செய்துள்ளனர். ரமலான் துவக்கத்தில் ஒரு வாரம் அதிரையில் நல்ல குழுமையான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக நோன்பாளிகள் சற்று சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து இன்று காலையிலும் வெயில் சற்று அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் இன்று இஃப்தார் நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் லேசான தூரலாக பெய்யத்துவங்கிய மழை சில நிமிடங்களில் கண மழையாக உருவெடுத்து இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்தது. இதனால் அதிரையில் தற்சமயம் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.13466233_1050133651723679_4750499720670316002_n

Close