உயிருக்குப் போராடும் கோவை அபுதாஹிர் வழக்கில் விசேஷ கருணை காட்ட வேண்டும் – தமிழக முதல்வருக்கு தமுமுக வேண்டுகோள் !

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் அறிக்கை: 

 நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளின் செயல்களுக்காக எவ்வளவு தண்டனை கிடைக்குமோ அதில் பாதியளவு தண்டனைக் காலத்தை நிறைவு செய்திருந்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என செப்டம்பர் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. 

மேலும் இதற்கான பணியினை எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதலை செய்யப்பட வேண்டிய விசாரணைக் கைதிகள் குறித்த வழிமுறைகளையும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், மூன்று பெண்கள் சிறப்பு சிறைகள், ஐந்து சிறப்பு கிளை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், மற்றும் 95 கிளை சிறைகளில் உள்ள 7000க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் விஷயத்தில் ஒரு நல்லதோர் தீர்வு ஏற்பட உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வழிவகுக்கும் என சமூக நலன் நாடும், மனித உரிமைப் பேணும் சக்திகள் மகிழ்ச்சியும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டு வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் முன்னோடியாக சிறை அதாலத் நீதிமன்றம் மூலம் 2500 பேர் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு மிகுந்த மகிழ்வையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 அதேவேளையில் இன்னமும் சிறைகளில் வாடும் ஏராளமானோர் நோயுற்றோர், வயோதிகம் உள்ளிட்டவைகளால் துன்புறும் சிறைவாசிகளின் விஷயத்தில் நீதித்துறையும், சிறைத்துறையும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக கோவை சிறையில் 15 ஆண்டுகளாக இருக்கும் கோவை அபுதாகிர் உடல்நிலை மோசமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அபுதாஹிர் விஷயத்தில் தாமதிக்காமல் கருணை காட்டி அவரை விடுவிக்க ஆவன செய்யுமாறு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் !இவர்கள் விடுதலை ஆக நாம் துவா செய்வோம் .

தகவல் : மதுக்கூர் ஃபவாஸ்

Advertisement

Close