Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

13413708_1038885379494507_1136365136746370834_nஅய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை (18-06-2016) அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவக அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் திருவாடுதுறை அன்சாரி, காயல் ஷேக்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார். செயற்குழு உறுப்பினர் அதிரை கவியன்பன் கலாம் ரமழானை பற்றிய கவிதை வாசித்தார்.

சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை நிகழ்த்த, பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

காயல் மௌலானா ஹாஃபிழ் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி துவக்கவுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் டாக்டர். நவீன் குமார், அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஹபீபுல்லாஹ், அபுதாபி தமிழ்ச் சங்க தலைவர் ரெஜினால்ட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எழுத்தாளர் கனவுப்பிரியன் யூசுஃப் எழுதிய “கூழாங்கற்கள்” என்னும் நூலை ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் டாக்டர். நவீன் குமார் வெளியிட, அய்மான் கல்லூரி தாளாளர் ஹபீபுல்லாஹ், அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன், செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷுஐப், இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் அப்துல் காதர், அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை அன்சாரி, அமீரக தமுமுக சஃபீயுல்லாஹ், அல் மனாக் நிறுவன மேலாளர் லால்பேட்டை முஹம்மது அலி, காயல் நல மன்ற கௌரவ தலைவர் இம்தியாஜ் அஹ்மத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி அவர்கள் பணி நிறைவு பெற்று தாயகம் செல்வதையொட்டி, அவரின் பணிகளை பாராட்டி சங்கத்தின் சார்பில் ஹபீபுல்லாஹ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நன்றியுரையாற்றினார்.

லால்பேட்டை மௌலவி ரஷீத் அஹ்மத் துஆ ஓதினார்.

இந்நிகழ்ச்சியில் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு ஊர் ஜமாஅத்களின் நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் துணைச் செயலாளர் காயல் உமர் அன்சாரி, செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மன்பஈ, ஆடுதுறை அப்துல் காதர், கீழை அல்லாஹ் பக்ஷ், காயல் லெப்பை தம்பி உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்காக நடைபெற்ற தங்க நாணய பரிசு குலுக்கலில் காயல் லெப்பை தம்பி தங்க நாணயம் பரிசு பெற்றார்.

 13417546_1038885332827845_64341382989009619_n

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy