500 ல் அதிரையிலும் ஒன்று!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக நண்பகல் 12 மணியாக, இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 500 டாஸ்மாக் மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் மூடப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி, மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை விவரங்களை டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் திருச்சி மண்டலத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் அதிரையில் முத்துப்பேட்டை ஈசிஅர் சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடையும் அடங்கும்.

Close