எனது கடைக்கு தீயிட்டவர்கள் கண்டிப்பாக இஸ்லாமியர்களாகவோ அல்லது மதநல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்களாகவோ இருக்க வாய்ப்பில்லை !!நெஞ்சை உறைய வைத்த மணியின் பளீர் பேட்டி !

முத்துப்பேட்டையில் கடந்த 3 ஆம் தேதி இந்துமுன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது .சுமார் 18 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டன .

பின்னர் கொய்யா மஹால் அருகே மணி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை யாரோ சில மர்ம ஆசாமிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டது .இதனை தொடர்ந்து,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ,பாதிக்கப்பட்டவரும் கடையின் உரிமையாளருமான மணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் .

இந்நிலையில் தீயினால் கருகிய தனது கடையை புணரமைக்கும் பணிகளை மணி செய்துகொண்டிருந்தார் .முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பில் அவரை சந்தித்தார்கள்  .புணரைப்பு பணிகளுக்கிடையில் மிகவும் சோகமாக காணப்பட்டவர் ,நம்மை கண்டவுடன் இன்முகத்துடன் வரவேற்றார்.பின்னர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் .

கே :உங்கள் கடைக்கு  தீவைத்தவர்கள் யாருன்னு தெரியுமா ?

பதில் : கடவுள் மேல சத்தியமா தெரியாதுங்க .வழக்கம் போல் 3 ஆம் தேதி இரவு கடையை சாத்திவிட்டு  வீட்டிற்கு சென்றுவிட்டேன் .பின்னர் கலையில் மீண்டும் எனது கடையை திறக்க வரும்போது ,எனது கடையின் சட்டர மீது படிந்திருந்த தீக்கரியை கண்டு அதிர்ச்சியடைந்தேன் .பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது ,உள்ளே இருந்த அத்துனை பொருட்களும் தீயால் கருகி இருந்ததை கண்டேன் .

கே :உங்கள் கடையை சேதப்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுத்துள்ளீர்களா ?

பதில் :ஆம் கொடுத்துள்ளேன் .

கே :உங்களிடம் என்ன விசாரித்தார்கள் ?

பதில் :உங்களுக்கு தனிப்பட்ட எதிரிகள் யாரும் உண்டா என கேட்டார்கள் .எனக்கு அப்படிப்பட்ட எதிரிகள் யாரும் இல்லை என தெரிவித்துவிட்டேன் .

கே :இந்து முன்னணி நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது .இதற்கு பதிலாக உங்கள் கடையை சேதபடுத்தி இருப்பார்கள் என நினைகின்றீர்களா ?

பதில் :கண்டிப்பாக அப்படி நான் நினைக்கவில்லை பாய் .ஏன் என்று சொன்னால் எனக்கு எல்லோரிடமும் நல்ல பழக்க வழக்கம் உள்ளது .குறிப்பாக இஸ்லாமிய பெரியோர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் என்னிடம் அன்பாக பழகுவார்கள் .எனவே என் கடையை ஒரு இஸ்லாமியரோ அல்லது மதநல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்களோ செய்திருக்க வாய்ப்பே இல்லே பாய் .

பின்னர் அவரிடமிருந்து வங்கி கணக்கு என்னை பெற்றுக்கொண்ட நாம் ,உலக மக்களின் பொது மறையாம் திருமறை குரானின் தமிழாக்கத்தை சகோதரர் மணி அவர்களுக்கு வழங்கினோம் .அதனை பெரும் ஆவலோடு பெற்றுக்கொண்ட மணி அவர்கள் ,குரானின் பக்கங்களை புரட்டி அதன் அத்தியாயங்களையும் வசனங்களையும் ஓதி பார்த்தார் .
சகோதரர் மணி அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுக்க நாம் அனைவரும் துவா செய்வோமாக …ஆமீன் …
பண உதவி செய்ய விரும்புவோர் மணி அவர்களின் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்கிறோம் .

J.MANIKANDAN
A/C NO:609201007488
ICICI BANK
MUTHUPETTAI BRANCH
IFSC CODE:ICC 000609
CELL:9698548943

———————————————————————————————————-
சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் (muthupettai express)
                MA .JOURNALISM AND MASS COMMUNICATION 
                உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
                 சென்னை  


Advertisement

Close