ஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்!

syria 1ஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்!

வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியாலும், ஷியாக்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் இன்று ஏமன், சிரியா, ஈராக் மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளார்கள். எந்த மக்களையும் இறைவன் சோதித்தால் அதன் பிறகு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுப்பது படைத்தவனின் பண்பு. நல்லவர்களைத்தான் இறைவன் அதிகம் சோதிப்பான். குடிக்க தண்ணீர் இன்றி அந்த சின்னஞ் சிறுசுகள் பைப்பில் இருந்து கசியும் தண்ணீரை குடிப்பதை பார்த்தவுடன் எனது கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. நமக்கு வாழ்வில் ஏற்படும் சிரமங்கள் எல்லாம் இந்த சிறுவர்கள் முன்னால் வெகு அற்பமாக தெரிகின்றன.

இறைவா! இந்த மக்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!

ஏமன், சிரியா, ஈராக் போன்ற தேசங்களில் அமைதியைக் கொண்டு வருவாயாக!

இஸ்லாத்தை சரிவர கடைபிடிக்கும் ஆட்சியாளர்களை அந்த மக்களுக்கு தந்தருள்வாயாக!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு நம்பிக்கைக் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்

அல் குர்ஆன் : 2:214

Close