அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

KMC-adirai

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 2016-17 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஏ. உதுமான் முகைதீன் தலைமை வகித்துப் பேசுகையில், கல்லூரி தோன்றிய வரலாறு, இளங்கலை பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை கல்லூரியில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடப்பிரிவுகள், பல்கலைக்கழக அளவில் கல்லூரி நிகழ்த்திய பல்வேறு சாதனைகள், மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், நேரம் தவறாமை, படிப்பில் கவனம் செலுத்துதல் ஆகியன குறித்து விளக்கினார்.

இதில் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Close