இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன் பணிப்பெண்!

philiphineசவுதியில் உள்ள அல்கஸீம் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கத்ரீனா என்ற பிலிப்பைன் பெண் வீட்டு வேலைக்கு வந்தார். வந்த சில நாட்களிலேயே வேலை பிடிக்கவில்லை. பிலிப்பைன்ஸில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த இந்த கிருத்தவ பெண்ணை 20 அடி உயரமுள்ள மதில் சுவரைக் கொண்ட வீட்டிற்குள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்றால் கொடுமைதானே! 🙂 மொழி புதிது: மதம் புதிது: சாப்பிடும் உணவுகளும் புதிது: ஆட்களும் புதிது: கலாசாரமும் புதிது: எனவே மன அழுத்தத்துக்கு ஆளான இந்த பெண் பலவாறு பிரச்னை பண்ணியுள்ளார். வீட்டு ஓனரான அல் ஜேஸ் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் அந்த பெண் கேட்பதாக இல்லை. முடிவில் இந்த பெண் வீட்டிலுள்ள ஏசி துவாரத்தின் வழியாக தப்பித்து வெளியேறி விட்டார். பிறகு போலீஸில் சரணடைந்துள்ளார். அவரை பெண்கள் காப்பகத்தில் போலீஸார் அனுமதித்தனர்.

சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் தனது தவறை உணர்ந்தார். சிறந்த குடும்பத்தவரை பலவாறு சிரமப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தினார். அந்த சவுதி குடும்பத்தினரின் இஸ்லாமிய நடைமுறைகள் அவரை கவர்ந்தன. அந்த குடும்பத்துக்கு பலவாறு தொந்தரவு கொடுத்தும் அவர்கள் இந்த பெண் மீது காட்டிய அன்பும் கருணையும் இவரது மனதை மாற்றின. இத்தகைய அழகிய குடும்ப வாழ்வு இஸ்லாத்தில் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதென்று முடிவெடுத்தார்.

அதன் பிறகு காவலர்கள் முன்னிலையில் அவருக்கு இஸ்லாமிய உறுதி மொழி எடுத்துக் கொள்ள பணிக்கப்பட்டது. ‘இறைவன் ஒருவனே! முஹம்மது நபி அவரது இறைத் தூதராக இருக்கிறார். ஏசு நாதர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ அல்ல: அவரும் ஒரு இறைத் தூதரே’ என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டார் அந்தப் பெண். அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கு ஜவுரி என்ற அராபிய பெயர் சூட்டப்பட்டது. புனித ரமலானில் தற்போது அதே குடும்பத்தோடு இணைந்து நோன்பும் வைக்கிறார். அந்த குடும்பத்தில் சந்தோஷமாக வீட்டுப் பணியிலும் ஈடுபடுகிறார்.

Close