Adirai pirai
தமிழகம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

201606221313431304_Tamil-Nadu-the-rain-will-last-for-2-days-Meteorological_SECVPF

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

திருவாலங்காடு 6 செ.மீ, வேலூர் 4 செ.மீ., நெய்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை அதிகாரி கூறும்போது, “வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்ம” என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை லேசான மழை தூறல் இருந்தது. ஆனாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy