மரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர்!

hafidh
மரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர்!

ஆப்ரிக்காவில் உள்ள இந்த குழந்தைகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் மரத் துண்டுகளில் குர்ஆன் வசனங்களை எழுதி மனனம் செய்கின்றனர். அதற்கேற்ற சூழலை இந்த குழந்தைகளின் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆன் மனனம் செய்தே ஆக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. அதனை சரி செய்ய முதலில் முயற்சிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் காலத்தில் அவரது தோழர்கள் முறை வைத்து இஸ்லாத்தை கற்றார்கள். ஒருவர் வேலைக்கு போவார். மறு நாள் அவர் இஸ்லாத்தை கற்பார். பாடம் பயின்றவர்கள் வேலைக்கு போனவருக்கு ட்யூஷன் எடுப்பார்கள். இதனால்தான் அவர்கள் கவுரமாக வாழ்ந்து மரணித்தார்கள். நபிகள் நாயகமும் தங்களுடைய வருமானத்துக்காக 100 ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார்கள். எவரிடமும் கையேந்தியதில்லை.

எனவே இதன் மூலம் அறிவது அந்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம். அதே நேரம் அந்த சிறுவர்கள் உலக கல்வியையும் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். மாறி வரும் அறிவியல் உலகுக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது தமிழகத்தில் உள்ள மதரஸாக்களில் நவீன கல்வியையும் புகுத்த வேண்டும். ஏழு வருடம் படித்து வெளியேறும் மாணவன் உலக சவால்களுக்கு ஈடு கொடுக்கக் கூடியவனாக வெளியேற வேண்டும்.

Close