இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றது காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான  கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைப்பெற்றது இதில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி அணியை எதிர்த்து புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் விளையாடினர்.

முதலில் மட்டைபணியை துவங்கிய புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் ஆறு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை குவித்தனர். 118 ரன்கள்  குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே குவித்தனர். இதன் மூலம் புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரி அணியினர் அபார வெற்றிபெற்றனர்.

Advertisement

Close