Adirai pirai
தமிழகம்

கீழக்கரை விபத்து எதிரொலி! இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!

கீழக்கரையில் சமீபத்தில் இளம் பிஞ்சுகள் 4 பேர் விபத்தில் காலமாகி மனதுயரம் அகழ்வதற்கு முன் மீண்டும் டூவீலரில் சிறுவர்கள் வலம் வர தொடங்கி விட்டனர்.விதிமீறும் வாகன ஓட்டிகளால் இன்னல்கள் தொடர்ந்து வருகி றது. சமீபகாலமாக, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமம் பெறாமல், ஆபத்தான முறையில் பைக் ஓட்டி செல்வது குறையவில்லை இந்நிலையில் நேற்று கீழக்கரை நகரில் 15 வயது சிறுவர்கள் இருவர் இரு பைக்குகளில் வலம் வந்தனர் .

இவர்களிடம் இருந்து டூவீலர்களை கீழக்கரை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு ரூ ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு டூவீலர்களை விடுவித்தனர் இது குறித்து டிஎஸ் பி மஹேஸ்வரி இருவரின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறியதோடு இனி இது போன்று தொடர கூடாது என்று கடுமையாக எச்சரித்தார் மேலும் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க கீழக்கரை காவல்துறையினருக்கு உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியன் கூறுகையில் அதாவது 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் பைக் ஓட்டினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, அந்த சிறு வனை காவல் நிலையம் கொண்டு சென்று அபராதம் விதிக்கவும், அது மட்டு மல்லாமல் சிறுவ னின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அந்த பெற்றோருக்கும் 500 ரூபாய் அபராதம் என மொத் தத்தில் ஆயிரம் ரூபாய் அபரா தம் விதிக்கப்படும். அபராதம் கட்டிய பிறகு பெற்றோரிடம் வாகனம் ஒப்படைக்கபடும். எனவே இது போன்ற தவறான செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.