Adirai pirai
education and jobs தமிழகம்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் VISUAL COMMUNICATION பாடப்பிரிவு துவக்கம்

image
மாணவர்கள் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை தெரிந்துக்கொண்டால் உலகத்தில் பல சாதனைகளை நாம் கையாளாலாம் என்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவு தொடக்க விழாவில் திரைப்பட இயக்குனர் அமீர் கூறினார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தொடங்கப்பட்டு 65ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதில் படித்த அனைவரும் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் இருந்து வருகின்றன. குறிப்பாக தொழில் பிரிவு சார்ந்த பட்டப்படிப்புகளும், இருந்து வருகின்றன. திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதியதாக பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவு தொடக்க விழா நடைப்பெற்றது. தொடங்கப்பட்ட ஆண்டு முதலே மாணவர்களுக்கு ஏதுவாக பல்வேறு நாளிதழ்கள், சேனல்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வேந்தர் டி.வி மற்றும் மக்கள் குரல், மணிச்சுடர் ஆகிய நாளிதழ்கள் மற்றும் டிரினிட்டி மிர்ரர் ஆங்கில நாளிதழ் ஆகிய கம்பெனிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் முகமது சாலிகு தலைமை வகித்து பேசினார். துறை பொருப்புத் தலைவர் ஜார்ஜ் அமல ரத்தினம் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் தாளாளர் முனைவர் காஜா நஜ்முதீன், உதவி செயலாளர் ஜமால் முகமது, பொருளாளர் கலீல் ரஹ்மான், இயக்குநர்கள் முனைவர் அப்துல் சமது, முனைவர் முஹமது பாசில், பேராசிரியர் ஜமால் முஹமது ஜுபைர், துணை முதல்வர்கள் முனைவர் முஹமது இப்ராஹீம், முனைவர் இஸ்மாயில் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி செயலாளர் முனைவர் காஜா நஜூமுதீன், உதவி செயலாளார் ஜமால் முஹம்மது, பொருளாளர் கலீலூர் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிர்ரர் ஆசிரியர் முத்துக் குமார், மணிச்சுடர் நாளிதழின் செய்தி ஆசிரியர் காயல் மகபூப், வேந்தர் டிவி சார்பில் திருச்சி செய்தியாளர் குமார், திருச்சி செய்தியாளர் சாகுல் ஹமிது ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த்தில் மாணவர்களுக்கு செய்தி மற்றும் ஓளிப்பதிவு மற்றும் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு பயிற்சி அளிப்பது, மற்றும் இறுதி ஆண்டில் இரண்டு மாத்த்திற்கு செய்முறை விளக்கமும், பயிற்சியும் அதன் பின்பு திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என இந்த புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மணிச்சுடர் செய்தி ஆசிரியர் காயல் மக்புப் பேசியதாவது இத்துறையில் மாணவர்கள் பல சாதனைகளை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக வரலாற்றை அதிகம் அதிகம் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். ஜமால் முஹம்மது கல்லுரியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஜமால் கல்லூரியை தோற்றுவித்த ஜாமல் முஹம்மது, நைனார் முஹம்மது ராவுத்தர் ஆகியோர் சுதந்திர போராட்ட தியாகிகள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும். இன்றைய தலைமுறையினர் வரலாற்றை படிக்காமல் எதிர்காலத்தை சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றை அறிந்தால் தான் எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்பதை யாரும் மனதில் கொள்வதில்லை. காயிதே மில்லத் போன்ற வரலாற்று தலைவர்களை அறிந்து செயல்பட்டால் மீடியா துறையில் பல மைல்கல்களை அடைய முடியும்.
விஷுவல் கம்யூனிகேசன் துறையில் விளம்பரம், இதழியல், கேமரா போன்ற பாடங்களை கற்று அதற்கான பயிற்சிகளை அவ்வப்போது, அப்பொழுதே செய்து பயிற்சி கொள்ள வேண்டும். மேலும் மதிப்புகூட்டும் கல்வி என்ற பாடமும் உண்டு. அந்த பாடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி பேச வேண்டும் மற்றும் மேடையில் எப்படி பேசுவது. போன்றவற்றை சரியான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம் பல அறிஞர்களுக்கு பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்று தெரியமலே இருக்கிறது, அதற்கு உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் ஆவர். அதனால் மாணவர்களாகிய நீங்கள் இதிலும் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை காமராசர் பல்கழைக்கழகத்தின் முன்னாள் இதழியல் துறை தலைவரும் ஊடக அராய்ச்சி இயக்குனர் முனைவர் சாந்தா பேசுகையில் மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை மாணவர்கள் அதிகம் படித்து அதில் உள்ள கருத்துகளை குறும்படங்களாக உருவாக்கிட வேண்டும். ஆக்கபூர்வமான கருத்துகளை ஊடகம் வாயிலாக எவ்வாறு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். நல்ல எண்ணங்களை மாணவர்கள் தங்களுக்குள் வளர்த்துதெடுக்க வேண்டும் ஏனேனில் எண்ணங்களே செயல்களாய் உருப்பெறும் தன்மையுடையதாய் இருக்கின்றன. நவின ஊடகங்கள் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் அவசியமானாதாகும் அவற்றை மாணவர்கள் இக்கல்லூரி காலங்களில் நல்ல முறையில் கற்று அதை எதிர்காலத்தில் சிறப்பாக பயன்ப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் குரல் மற்றும் டிரினிடி மிர்ரர் ஆசிரியர் முத்துக் குமார் பேசுகையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி ஊடக உத்திகளை கற்றுக்கொள்ள வேண்டும். இதழியல் துறை தலைவர் சாந்தா சொன்னது போல மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு அதை சிறப்பான முறையில் தங்கள் துறையினில் பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் உங்கள் துறை சார்ப்பில் சிறிய பத்திரிக்கை வெளியிட்டால் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக எங்கள் நிறுவனம் சார்ப்பில் பதிப்பித்து தருகின்றோம். அதேப் போன்று எங்கள் பதிப்பு சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் எங்கள் பத்திரிக்கை வெளி வந்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் எப்போதும் வேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்திற்கு வந்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் திறமைகளை வளந்த்துக் கொள்ள உதவி செய்ய காத்திருக்கிறோம் இவ்வாறு அவர் பேசினார்.

திரைப்பட இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்:- இஸ்லாமிய கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேசன் துறை என்பது தொடங்க மாட்டார்கள் ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு இஸ்லாமிய கல்லூரியில் விஷுவல் கம்ம்யூனிகேசன் துறை ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியதாகும். அதனாலே நான் ஜமால் முஹம்மது கல்லூரிக்கு வந்தேன். ஆர்வத்தோடு படிக்கும் படிப்பாகும். ஆர்வத்தோடு படித்தால் மட்டுமே வேலைவாய்ப்பு அமையப்பெறும். நான் படிக்கும் காலங்களில் பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பை நண்பனின் உதவியோடு முடித்தேன். வீட்டில் படிப்பை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் 12ம் வகுப்பு படிக்காமல் விட்டுவிடலாம் என்ற நோக்கில் இருக்க என் மாமா ஒருவர் 12ம் வகுப்பு கல்வியில் சேர்த்து பின் பல கஷ்டங்களில் முடிக்க கல்லூரியிலும் சேர்ந்து பின் பிடிக்காமல் சினிமா துறைக்கு வந்தேன். வீட்டில் பல வகையில் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராய் பணிபுரிந்து படம் வெளியாகும் சமயத்தில் பிரச்சனையின் காரணமாய் என் பெயர் போடவில்லை. அதன் பின் அந்த இயக்குநரிடம் பேசலாம் என்று என் நண்பர்கள் கூறிய போது வேண்டாம் அந்த இயக்குநர் என்னை இயக்குநராய் பார்க்க இருக்கிறார் என்று எடுத்து கொண்டேன்.
அதை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்பட்த்தையும் எடுத்தேன். அதில் பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்த்து தான் என்னுடைய நண்பர்கள், வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் என் குடும்பத்தார்கள் பேப்பரில் பார்த்து கூட இயக்குநராய் நம்பவில்லை. மௌனம் பேசியதை படத்தை நான் கஷ்டப்பட்டு எடுத்த போது பல்வேறு இடையூறுகள் இருந்தன. இது போன்று பிரச்சனைகள் வெளிவரும் போது எதையும் சரியான முறையில் எடுத்துக் கொண்டு மாணவர்களாகிய நீங்கள் முன்னேற வேண்டும் .
இந்தியா முன்னேறிய காலத்தில் ஸ்லெம்டாக் மில்லியனர் என்ற படத்தை எடுத்து அதற்கு ஆஸ்கர் அவார்டு கொடுத்து உலக அளவில் பேச செய்ததை நாம் பெருமையாக நினைத்து கொண்டிருகிறோம், ஆனால் அதன் பின் இந்தியர்கள் என்றால் அவர்கள் சினிமா பிரபலங்களுக்காக கழிவுகளிலும் விழுவார்கள், அங்கே விபச்சாரம் அதிகம் என்பதை உலக நாடுகளுக்கிடையே அரங்கேற செய்ய அமெரிக்கா செய்த சதி என்பதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அனைத்து படங்களையும் புரிந்து, பார்க்க வேண்டும், நான் ஒரு சில நாடுகளுக்கு சென்ற போது இந்தியர்கள் என்று சொன்னால் தெரியாது. ஏ.ஆர் ரஹ்மான் என்று சொன்னாலே தெரியும், ஆனால் இந்தியா என்று சொன்னால் அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று தெரியாமலே இருக்கிறது.
எனவே தான் மாணவர்களாகிய நீங்கள் தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம். நான் தமிழை தவிர மற்ற மொழி தெரியாமல் இருக்கிற காரணத்தில் தான் நான் தமிழை விட்டு வேறெங்கும் செல்ல முடியாமல் இருக்கிறது. ராம் என்ற திரைப்பட்த்தை இந்தியில் ரீமேக் செய்ய கேட்டார்கள் ஆனால் மொழியில் பிரச்சனை என்பதா நான் போகவில்லை. மொழியினால் நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை உணர முடிகிறது. அதற்காக தான் நாம் அனைவரும் பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு உலக நாடுகளில் இந்தியர்கள் உணவு விடுதிக்குள் நுழைய கூடாது என்ற சட்டங்களை வைத்துள்ளார்கள். சாந்தா, காயல் மகபூப், போன்றோர் கூறியபடி கதைகளை படித்து, வரலாறுகளை அறிந்து நடக்க வேண்டும்.

ஜமால் முஹம்மது பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அதை இத்துறை மாணவர்களே சவலாக எடுத்துக் கொண்டு ஆவணப்படத்தை தயாரிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் என்னைப்போன்று வர வேண்டும் என நினைக்க கூடாது. ஒவ்வொரு திறமைகளையும் வளர்த்து கொண்டு சாதனை புரிய வேண்டும்.உங்கள் வீட்டை வைத்தே நீங்கள் கதை எழுதலாம். அடுத்தவர்களின் கதையை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே நீங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவதற்கு என்னால் முடிந்தா உதவிகளை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மாணவர்கள் பல்வேறு சினிமா சார்ந்த கேள்விகளுக்கு இயக்குநர் அமீர் பதிலளித்தார்.

விழாவில் முன்னாள் முதல்வர்கள் முனைவர் ஆர்.கே காதர் மொய்தீன், முனைவர் முஹமது ஜிந்தாஷா, விடுதி இயக்குநர் முனைவர் முஹம்மது சகாபுதீன், விடுதி ஒருங்கிணைப்பாளர் முனைவர் முஹம்மது சர்புதீன், ஜமால் முஹம்மது முன்னாள் மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் அலீமுதீன், திருச்சி செய்தியாளர் எம்.கே ஷாஹுல் ஹமீது, ஜமால் முஹம்மது கல்லூரி விஷுவல் கம்யூனிகேசன் துறை பேராசிரியர் சண்முக வேலாயுதம், திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி காட்சித்தொடர்பியல் துறை தலைவர் பேராசிரியர் பிளெஸ்ஸி, முனைவர் செந்திலா தேவி மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் பேராசிரியர் அப்துல் காதர் நிஹால் நன்றி கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy