Adirai pirai
posts

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

image

அதிரை லயன்ஸ் சங்கத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று இரவு அதிரை சாரா திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்றது. இதில் தற்போதைய 2015-16 ஆம் ஆண்டின் தலைவர் N.ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுனர் H.ஷேக் தாவூத் அவர்கள் புதிய பொருப்பாளர்களை பதவியில் அமர்த்துவர்க்கும், மணடல தலைவர் S.K.ராமமூர்த்தி அவர்கள் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்திடவும் வருகை புரிந்தனர்.

இதில் வட்டார தலைவர் T.ஆனந்த கிருஷ்ணன், மண்டல செயலர் பேரா.K.செய்யது அஹமது கபீர், மண்டல பொருளர் Er.K.ஸ்ரீராம், M.K.ராஜ்குமார், J.லிங்மிசந்த், G.K.மனோகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

வாழ்த்துரையை மாவட்ட தலைவர் ஹாஜி.S.M.முஹம்மது மைதீன், மாவட்ட தலைவர் பேரா.மேஜர்.S.P.கணபதி, மக்கள் தொடர்பு அலுவலர் ஹாஜி.M.நெய்னா முஹம்மது, மாவட்ட தலைவர் T.P.K.ராஜேந்திரன், மாவட்ட தலைவர், S.H.அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர் M.சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் M.அஹமது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சி முழுவதும் பேரா.ஹாஜி.M.A.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

image image image image image image image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy