அதிராம்பட்டினம் அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது!

201606251617469820_ganja-sales-youth-arrest-in-Adirampattinam_SECVPF

அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் என்கிற ராஜசேகர்(வயது 31).இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது இங்கு ராஜசேகர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவுடன் அவரை கைது செய்தனர்.

அதிராம்பட்டினம் பாலு செட்டித் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் பிரவீன்ராஜ் (வயது24). இவரும் கஞ்சா விற்றபோது ரோந்து சென்ற போலீசார் ¼ கிலோ கஞ்சாவுடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:மாலை மலர்

Close