Adirai pirai
தமிழகம்

தஞ்சையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி!

201606251657438968_drug-awareness-rally-held-in-tanjore_SECVPF

தஞ்சாவூர்:

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கலெக்டர் சுப்பையன், கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பேரணியில் போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளான எச்.ஐ.வி. தொற்றுநோய்கள், இதயம், நுரையீரல், சிறுநீரக கோளாறுகள், மன ரீதியான பாதிப்புகள் மற்றும் போதை பொருள் பயன்படுத்தினால் எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதி வழியாக அரண்மனை வளாகத்தில் சென்றடைந்தது.

பேரணியில் உதவி ஆணையர் (கலால்) செல்வம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.ஜெயசேகரன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர்.சிங்காரவேல், ரெட்கிராஸ் ரத்த வங்கி தலைவர் டாக்டர்.டி.வி. சாத்தப்பன், ரெட்கிராஸ் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், துணைத்தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் முத்துக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ஜோதி நாதன், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கபிலன், மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சிட்டிபாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy