சிறந்த பராமரிப்பு பணி: திருச்சி விமான நிலையம் 6-வது இடமாக தேர்வு!

201606251844361227_Better-maintenance-work-Trichy-Airport-is-ranked-6th-choice_SECVPF (1)திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் எந்த விமான நிலையங்களில் சிறப்பான முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி விமான நிலையம் 6-வது இடமாகவும், தென் மண்டலத்தில் முதலிடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கழிப்பறை வசதி, டிராலி பராமரிப்பு, கார் பார்க்கிங்,டூவீலர் பார்க்கிங் வசதி மற்றும் ஒட்டு மொத்த விமான நிலைய பராமரிப்பு ஆகியவற்றை சிறப்பான முறையில் பராமரிப்பு செய்தற்காக 6-வது இடமாகதேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறும் போது, இந்தியா முழுவதும் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி விமான நிலையமும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக தமிழக அரசின் பார்வைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததும் விரிவாக்க பணிகள் தொடங்கும்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் 20 முதல் 25 டன் வரை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருடத்திற்கு 7500 டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.

Close