Adirai pirai
posts தமிழகம்

கீழக்கரையை தொடர்ந்து கடையநல்லூரிலும் அதிவேக ரேசால் கோர விபத்து! 5 இளைஞர்கள் பரிதாப மரணம்!


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் பரிதாபமாக வேன் மீது மோதி பலியாயினர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை உருவாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையை சேர்ந்த சிராஜ்தீன், இஸ்மாயில், ஷேக் முகம்மது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூரில் இருந்து நேற்று மதியம் சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மேலக்கடையநல்லூரை சேர்ந்த முத்துநாராயணசாமி, மகாராஜன் ஆகிய இருவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணாபுரம் அருகே குற்றாலத்தில் இருந்து ஒரு வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் வேகமாக பைக் ரேஸில் வருவதை பார்த்து வேன் டிரைவர் பிரேக் போடவே வேன் நிலை தடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த நேரத்தில் படு வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் வேன் மீது மோதியது.இந்த கோர விபத்தில், சிராஜூதீன், இஸ்மாயில், மகாராஜன், முத்துநாராயணசாமி ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். ஷேக் முகம்மது படுகாயமடைந்தார். அதேபோல வேன் கவிழ்ந்ததில் அதில் இருந்த 11 பேர் காயமடைந்தனர். ஷேக் முகம்மது ஆபத்தான நிலையில் நெல்லை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தை கேள்விப்பட்ட கடையநல்லூர் எம்எல்ஏ முகமது அபுபக்கர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.


இந்நிலையில் படுகாயமடைந்த ஷேக் முகம்மது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Courtesy: Newtamil

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy