திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முடியாமல் 3 மணி நேரம் வானத்தை வட்டமடித்த விமானம்!

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனியார் விமானம் ஒன்று தரையிரங்க முடியாமல் 3 மணி நேரமாக வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று மாலை 5.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானி மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.ஆனால், திட்டமிட்டபடி தரையிறக்க முடியாததால், விமானம் சுமார் மூன்று மணி நேரமாக திருச்சி நகரை வட்டமடித்தது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர், இரவு 7:35 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனிடையே ஏராளமான மக்கள் திருச்சி விமான நிலையம் முன்பு குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Close