Adirai pirai
INFORMATION posts உள்ளூர் செய்திகள்

அதிரை நடுத்தெரு, CMP லேன் பகுதிகளுக்கு இன்று தண்ணீர் விநியோகம் இருக்காது!

அதிரை நடுத்தெரு, CMP லேன் உள்ளிட்ட பகுதிகளுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து நேரடியாக வண்டிப்பேட்டை, சுரைக்காய் கொள்ளை, மாரியம்மன் கோவில் தெரு, பழஞ்செட்டித்தெரு, மெயின் ரோடு வழியாக சுற்றிக்கொண்டு இறுதியாக தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதனால் இப்பகுதிகளில் பழஞ்செட்டித்தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை விட குறைவான அளவே தண்ணீர் வீடுகளுக்கு வந்தடைகிறது. இந்நிலையில் இன்று அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீஃப் மருத்துவமனை எதிரில் நிலத்தடி பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நடுத்தெரு, CMP லேன் ஆகிய பகுதிகளில் ஒரு வீடுகளுக்கு முறையான தண்ணீர் விநியோகம் இருக்காது என சேர்மன் அஸ்லம் தெரிவித்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy