Adirai pirai
தமிழகம்

முத்துப்பேட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் மக்கள் பீதி! 100 பேர் வரை பாதிப்பு!

13557849_518386518358981_2243221470626138305_n

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் சமீபக்காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுப் பொருட்கள் பல இடங்களில் கிடந்து அசுத்தமான காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முத்துப்பேட்டை முழுவதும் விதவிதமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த புதுவித கொசு கடித்து முத்துப்பேட்டையில் 100 பேர் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அதிரையிலும் சுகாதார விசயங்களை கவனத்தில் கொள்ளுமாறு அதிரை பேரூராட்சிக்கு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி: நிருபர் முஹைதீன் பிச்சை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy