Adirai pirai
LADIES CARE தமிழகம்

உயிரை பரித்த சமூக வளையதளம்: பெண்களே எச்சரிக்கை!

சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், பள்ளி ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை புவனகணபதி கோயில் ெதருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழிலாளி. இவரது மகள் வினுப்பிரியா (21). திருச்ெசங்கோடு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்தார். பின்னர் இளம்பிள்ளை தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

imageகடந்த 16ம்தேதி அண்ணாதுரையின் செல்போனுக்கு ஒருவர் போன் ெசய்துள்ளார். அதில் பேசிய நபர், வினுப்பிரியா குறித்து அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து அதேபோல் போன் வந்ததால், அண்ணாதுரை அந்த சிம்கார்டை கழற்றி போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம்தேதி, அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ‘வினுப்பிரியா மைதிலி’ என்ற பேஸ்புக் ஐடியில் இருந்து நட்பு வட்டத்தில் இணையக் கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அது வினுப்பிரியாவின் ஐடி என்று நினைத்த உறவினர், அதை ஏற்று, அந்த ஐடியை திறந்து பார்த்துள்ளார். அதில் வினுப்பிரியாவின் ஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும், இளம்பிள்ளையை சேர்ந்த பலர், அந்த பேஸ்புக் ஐடியின் நட்பு வட்டத்தில் இருந்துள்ளனர். உடனே அவர் இது குறித்து அண்ணாதுரையிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும், சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமியிடமும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சேலம் சைபர் கிரைம் ேபாலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தார்.

மேலும், இந்த படத்தை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பேஸ்புக் ஐடியை முடக்க வேண்டும் என்று கோரிக்ைக வைத்தனர். அதற்கு போலீசார், பேஸ்புக் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால் உடனடியாக முடக்க முடியாது. குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஆகும் என்று ெதரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அந்த ஐடியில் வினுப்பிரியாவின் படத்தை போட்டு, தொடர்புக்கு என்று அண்ணாதுரையின் செல்போன் நம்பரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அண்ணாதுரை, சங்ககிரி டிஎஸ்பியிடம் புகார் தெரிவிக்க மனைவியுடன் நேற்று காலை 11 மணிக்கு பைக்கில் கிளம்பியுள்ளார். அப்போது வினுப்பிரியா மற்றும் அவரது பாட்டி கந்தம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

காலை 11.30 மணியளவில் கந்தம்மாள் குளிக்க வந்தபோது, வீட்டின் இருபக்க கதவுகளும் மூடப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, வினுப்பிரியா தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து வந்த பெற்றோர் கதறி துடித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வினுப்பிரியாவின் தற்கொலையை தொடர்ந்து அவரது பெயரில் செயல்பட்ட பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
வாட்ஸ்அப் புரொபைல் படம் மார்பிங்: அண்ணாதுரை தனது ஸ்மாட் போன் வாட்ஸ்அப்பில் மகள் வினுப்பிரியாவின் படத்தை புரொபைல் படமாக வைத்துள்ளார்.

அந்த படத்தை தான், விஷமிகள் காப்பி செய்து மார்பிங்கில் ஆபாச படமாக வெளியிட்டுள்ளது போலீஸ் விசாரணையில தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக வெவ்வேறு கோணங்களில் படங்கள் வெளியானதால் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் காரணமாகவே டிஎஸ்பியிடம் புகார் ெதரிவிக்க அண்ணாதுரை சென்ற சமயத்தில் வினுப்பிரியா தற்கொலை செய்துள்ளார். ஆசிரியராக இரண்டு நாட்கள் பணி: வினுப்பிரியா கடந்த ஆண்டு பி.எஸ்சி முடித்துள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த அவருக்கு, மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனிடையே அவரது தாத்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக வீட்டில் விஷேசம் நடத்த முடியாது என்பதால், வேலைக்கு செல்ல வினுப்பிரியா முடிவு செய்துள்ளார். இதனால் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த இரு தினத்திலேயே, பேஸ்புக்கில் அவரது புகைப்படம் பரவி உள்ளது. இதனால் உடனடியாக வேலையில் இருந்து நின்ற வினுப்பிரியா, வீட்டில் இருந்துள்ளார்.
பெண் கேட்ட வாலிபரிடம் விசாரணை
அண்ணாதுரையின் நெருங்கிய உறவினர் வீடு மேட்டூரில் உள்ளது. அங்கு வினுப்பிரியாவும் தந்தையுடன் அடிக்கடி சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வினுப்பிரியாவை பெண் ேகட்டுள்ளார்.

அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அண்ணாதுரை, பெண் கொடுக்க மறுத்துள்ளார். அந்த வாலிபர் கடந்த 14ம்தேதியும், அண்ணாதுரையை போனில் தொடர்பு கொண்டு ெபண் கேட்டுள்ளார். இதையடுத்து வாட்ஸ்அப்பில் ஆபாச படங்கள் பரவியதால், அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையை சேர்ந்த முகநூல் தோழி ஒருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை செய்யும் முன் விஷ்ணு பிரியா எழுதிய கடிதம்
‘நான் எந்த தப்பும் செய்யலை என்னை நம்புங்க…’
தற்கொலை செய்த ஆசிரியை வினுப்பிரியா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில்,
முதல்ல நீங்க எல்லாரும் என்னை மன்னிருச்சுருங்க. என்னோட லைப் போனதுக்கு அப்பறம் நான் வாழ்ந்து என்ன பண்ண போறன். எனக்கு வாழ பிடிக்கல. என்னோட அம்மா, அப்பாவே என்னை நம்பாதப்போ, நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம். அவங்களே என்ன பத்தி கேவலமா பேசுறாங்க., சத்தியமா ெசால்றன், நான் என் போட்டோஸ யாருக்கும் அனுப்பல. நான் எந்த தப்பும் பண்ணல. பிலீவ் மி.. ஒன் செகன்ட் சாரி.. சாரி.. பை
வினுப்பிரியா பி.எஸ்சி இவ்வாறு அந்த கடிதத்தில் வினுப்பிரியா தெரிவித்திருந்தார்.
வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் எத்தனை பொண்ணுங்களை சாகடிக்குமோ?
வினுப்பிரியாவின் தாயார் மஞ்சு கூறுகையில், ‘‘போலீசாரிடம் புகார் ெதரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் இன்னும் எத்தனை பொண்ணுங்கள கொல்லுமோ தெரியவில்லை. எனது மகள் சாவுக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும். அதுவரை சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம். மகள் சாவுக்கு நீதி கிடைக்காவிட்டால் அடுத்து நடப்பது எனது மரணம் தான்’ என்று கதறியழுதபடி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

போலீஸ்தான் பொறுப்பு தந்தை குற்றச்சாட்டு
வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது: சைபர் கிரைம் ேபாலீசார், பேஸ்புக்கின் சர்வர் வெளிநாட்டில் உள்ளதால், 20 நாட்களுக்கு பிறகு தான் அந்த பேஸ்புக் ஐடியை முடக்கி வைக்க முடியும் என கூறிவிட்டனர். ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்த 5 நிமிடத்திலேயே அந்த பேஸ்புக் ஐடி முடக்கப்பட்டுள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள், பணவசதி உள்ளவர்கள் புகார் ெகாடுத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போலீசார், எங்கள் புகாரின் மீது மெத்தனம் காட்டியுள்ளனர். எனது மகளுக்கு வந்த இந்தநிலை, இனிமேல் யாருக்கும் வர கூடாது. எனவே இந்தியாவில் பேஸ்புக்கிற்கு தடை விதிக்க வேண்டும். வினுப்பிரியா சாவு குறித்து வழக்குப்பதிவு செய்வதுடன், உண்மையான குற்றவாளியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை எனது மகள் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அண்ணாதுரை கண்ணீர் மல்க கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy