அதிரை பிறை மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை எதிரொலி! நாளை மின் தடை இல்லை!

20140606_145255_20140626114749022மாதா மாதம் மதுக்கூர் துணை மின்வாரியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார பழுதுகள் சீர் செய்வதற்க்காக இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மாதம் அதிரையில் இந்த மாதந்திர மின் தடையை ஒரு ரமலானை முன்னிட்டு ஒத்தி வைக்க வேண்டும் என அதிரை பிறை சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இது போன்று சமுக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா, சமுக ஆர்வலர் KMA.ஜமால் முஹம்மது அவர்களும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து நாளை அதிரையில் மின் தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கையை ஏற்று மாதந்திர மின் தடையை ஒத்தி வைத்த அதிரை மின்சார வாரியத்துக்கு அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.image

Close