பட்டுக்கோட்டையில் MLA CV.சேகர் தலைமையில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு பேரணி (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் மற்றும் நகார்மன்ற தலைவர் ஜவகர்பாபு மற்றும் ஒன்றி பெருந்தலைவர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தாங்கள் அருந்தும் தண்ணீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டாதா என்பதையும், தூய்மையான குடிநீரை மட்டுமே பயண்படுத்துவோம் என்றும் உறுதிக்கொள்ள வேண்டும் என கூறினர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த விழாவில் கலந்துகொண்ட நகராட்சி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நியைம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Close