அதிரையில் அராஜகம் செய்யும் இளைஞர்கள்!

ரமலான் அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் ரமலான் மாதம் நம்மை விட்டு பிரிய போகிறது. இந்த இறுதி பத்தில் லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக அனைத்து பள்ளிகளிலும் இஃதிகாஃப் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் இருந்து வருகின்றனர். மேலும் நமதூரின் சில பள்ளிகளில் இரவு நேர கியாமுல் லைல் தொழுகை நடத்தப்படுகிறது. இதில் அதிரையில் குர் ஆன் மனனம் செய்த, செய்துகொண்டிருக்கின்ற பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் தங்கள் அழகிய குரலில் தொழுகையினை நடத்துகின்றனர். இதில் பலரும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதிரையில் ரமலானை பயனுள்ள பாதையில் ஒரு பக்கம் சிலர் செலவளித்துக்கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம் மிகவும் மோசமான முறையில் ரமலான் என்றால் இதற்கு தானா??? என்று கேட்கும் வகையில் இளைஞர்கள் செய்யும் அக்கிரமங்கள் ஏராளம். இதில் மிக மோசமான ஒன்று நைட் ரவுண்ட்ஸ். இந்த நைட் ரவுண்ட்ஸ் செல்லும் சிலர் தங்கள் மனதில் பெரிய பைக் சாகசகாரர் என்று நினைத்துக்கொண்டு தெருக்களில் அதிக வேகத்தில் ஒரே பைக்கில் மூன்று நான்கு பேர் அமர்ந்துக்கொண்டு இரவில் தூங்குபவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டு செல்கின்றனர். இது தொடர்ந்து வாடிக்கையாகியுள்ளது. இவர்கள் இந்த ரமலானை பயனுள்ள வழியில் பயப்படுத்த வில்லை என்றாலுக் பாவமான வழிகளில் தங்களை ஈடுபடுதாமல் இருப்பது சாலச் சிறந்தது. 

எத்துனை விபத்து பதிவுகள், விபத்து விழிப்புணர்வுகள் என தொடர்ந்து நாம் செய்து வந்தாலும் இவர்களில் அக்கிரமங்கள் தொடருகின்றன. இவர்கள் செய்யும் அராஜகத்தால் போலிசார் அப்பாவிகள் சிலரின் பைக்குகளை கையகப்படுத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. தாங்கள் விளையாட்டுக்காக எது செய்தாலும் பிறருக்கு அதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு இருத்தல் வேண்டும்.

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

Close