olx-ல் போலி ஐ-போன்கள் விற்பனை! அனைவருக்கும் எச்சரிக்கை!


சென்னையில் ஓஎல்எக்ஸ் (OLX) ஆன்லைன் வர்த்தகத்தில் போலி ஐ போன்களை விற்று மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் ஓஎல்எக்ஸ் (OLX) ஆன்லைன் வர்த்தகத்தில், விற்பனையில் இருந்த ஐபோனை வியாசர்பாடியை சேர்ந்த நாகூர்கனி என்பவரிடம் பெற்றுள்ளார். 

22 ஆயிரம் கொடுத்து வாங்கிய அந்த ஐபோனை சோதனை செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீனிவாசன் சென்னை எக்ஸ்பிளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நாகூர்கனி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோல் 100க்கும் மேற்பட்டவர்களிடம் போலி ஐபோன்களை 4 பேரும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. 

Close