எச்.ராஜா, Y.G.மகேந்திரன் ஆகியோரை கைது செய்ய TNTJ கோரிக்கை!

imageசென்னை: ஐடி இளம்பெண் ஸ்வாதி படுகொலையில் குறிப்பட்ட மதத்தைத் தொடர்புப்படுத்திப் பேசிய எச் ராஜா, நடிகர் ஒய்ஜி மகேந்திரன் வகையறாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி கொலைவழக்கில் சரியான கோணத்தில் பயணித்து உண்மையான குற்றவாளியை கைது செய்த தமிழக காவல்துறையின் நடவடிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.
Tauheed Jamaat demands action on H Raja, Y G Mahendiran

அதேவேளையில் இந்த கொலையை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மீது பொய் பழி சுமத்தி பொது ஊடகங்களில் கருத்து பதிந்த பாஜகவின் எச்.ராஜா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் வகையராக்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் பட்சத்தில்தான் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கலவரத்தை தூண்டும் மாபாதகச் செயல்களில் இறங்க நினைக்கும் யாருக்கும் அச்சம் ஏற்படும்.
மேலும் தமிழகத்தில் இதுபோன்ற கொலைகள் நடப்பது புதிதல்ல. பல அப்பாவிகள் கொல்லப்பட்டு இதுவரை கொலையாளிகள் யாரென்றே தெரியாமல் வழக்கின் கோப்புகள் தூசு படிந்து கிடக்கின்றன.
ஸ்வாதி கொலையில் காட்டிய முனைப்புகளை போல், கொல்லப்படுவது விலை மதிக்க முடியாத மனித உயிர் என்கிற பொதுவான பார்வையில் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.

Close