கல்வி மாவட்ட அளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய சரித்திரம் படைத்தது !

   

   பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட குழுவிளையாட்டு  போட்டிகள்  கரம்பயம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (02.09.2014,  03.09.2014) செவ்வாய்,புதன் ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து  போட்டியில் ஜுனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்றனர். இப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக மூன்று பிரிவிலும் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் 65 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர் இதில் பி.முத்துராசு (ஜுனியர்), எம் முகம்மது ஆசிப் சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன் பட்டம்  வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர்,  உதவி தலைமமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  அலுவலக  பணியாளர்கள் பாராட்டினார்கள்.

Advertisement

Close