Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் பயங்கரம்! திமுக நகர செயலாளர் வெட்டி படுகொலை!

13592753_410077319162448_8683547834971433605_nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தங்க மனோகரன் ( வயது 60 ) பட்டுக்கோட்டை நகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர். கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நகராட்சி கவுன்சிலராகவும், ஒரு முறை நகராட்சி துணைத் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

திமுக கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவில் இணைந்தார். பின்னர் கடந்த ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் மீண்டும் இணைந்தார். இணைந்த சில வாரங்களில் பட்டுக்கோட்டை நகர திமுக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை தங்க மனோகரன் தனது தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது கோட்டைக்குளம் அருகே சுமார் 7 க்கும் மேற்பட்ட கும்பல் தங்க மனோகரனை வழிமறித்து கழுத்து, தலை பகுதிகளில் பலமாக வெட்டியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மனோகரன் முகத்தில் கல்லை வைத்து நசுக்கிட்டு சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்ட பொதுமக்கள் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது மனோகரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு – பதற்றம் நிலவி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy