Adirai pirai
islam

ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை திருப்பி ஒப்படைத்த சிரிய அகதி வாலிபர்!

image
அகதிகளுக்காக பரிசளிக்கப்பட்ட பழைய அலமாரியை, தன் வீட்டில் வைத்து சுத்தம் செய்யும் போது கத்தை கத்தையாக பணம் இருந்ததை அறிந்து, போலியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளார்.

இணையத்தின் மூலம் போலியல்ல என்பதை உறுதி செய்துகொண்டப் பின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இப்போது அந்த அலமாரிக்கு உரிமையாளரை போலீஸ் தேடி வருகின்றது.

“அலமாரிகளில் பணம் இருப்பது மிகவும் சாதாரண ஒன்று தான்.. ..அவ்வப்போது மக்கள் கண்டெடுக்கப்பட்ட சிறு தொகைகளை கொண்டு வருவது வழக்கம் ஆனால் இவ்வளவு அதிகமான பணத்தைக் திருப்பிக் கொடுப்பது நடைமுறையில் கேள்விப்படாத ஒன்று .
இந்த வாலிபரின் நேர்மையான செயல் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய, அரிதான ஒன்று.” என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

2015ல் ஜெர்மன் வந்துள்ள முஹன்னத்தின் குடும்பம் இன்னும் சிரியாவில் தான் உள்ளது.

தன் குடும்பம் கடும் துன்பங்களுக்கிடையில் கஷ்டப்படும்போதும், இந்தப் பணத்தை நீங்கள் ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டபோது

“பிறருடைய சொத்தை வைத்து என்னை வளப்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் அனுமதிக்கமாட்டான்”

என்ற முஹன்னதின் பதில்/உறுதி மெய் சிலிர்க்க வைக்கின்றது.

Thanks: மறைக்கப்பட்ட உண்மை செய்திகள் பக்கம்